இப் பரீட்சையின் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் 2026.10.10 ஆம் திகதி தொடக்கம் 2026.10.20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 44 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்கள் தமது விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக 2026.10.07 ஆம் திகதி தொடக்கம் தமது அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப் பரீட்சை தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருப்பின் இலங்கை பரீட்சைத் திணைக்களத்துடன் பின்வரும் விதங்களில் தொடர்பு கொள்ள முடியுமென்பதைத் தயவுடன் அறியத்தருகின்றேன்.

