கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் அண்மையில் (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ தலதாமாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இதன் போது தியவடன நிலமே நிலங்க தேல பண்டாரவும் இணைந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற கௌரவ சாபாநாயகர் மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் அவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் கௌரவ சபாநாயகர் கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன் பின்னர் நேற்றையதினம் (05) சபாநாயகர் அவர்கள் தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று மதத் தலைவர்களச் சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் சந்தித்து ஆசிபெற்றார்.
The post சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார் appeared first on PFP News.