அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் (இன்று 24) தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.
தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பெயரைத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் குமார நவரத்ன வழிமொழிந்தார்.
குழு முன்னிலையில் உரையாற்றிய குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், நாட்டை பாரிய நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு சரியான திசையை நோக்கி கொண்டு செல்லும் சவாலை சமாளிக்க அனைவரின் அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்பதாகக் கூறினார். குழு தனது எதிர்காலப் பணிகளை பாரபட்சமின்றியும் சுதந்திரமாகவும் மேற்கொள்ள எதிர்பார்க்கிறது என்றும், சரியான முடிவுகளை அச்சமின்றி எடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயங்காது என்றும் குறிப்பிட்டார்.
The post அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு appeared first on PFP News.