இலங்கையர்கள் உள்ளிட்ட உலகளாவிய தமிழ் மக்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடும் 2025ஆம் ஆண்டின் முதலாவது விழா தைப்பொங்கல் தினமாகும். மலரும் தைப்பொங்கல் தினம் செழிப்பு மிக்க, மகிழ்ச்சியான மற்றும் ஆன்மீகம் மிக்க தினமாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றேன்.
விளைச்சலை விருத்திசெய்வதற்கு கதிரவன் வழங்கிய ஒத்துழைப்புக்கும், அதனை மேலும் வளப்படுத்த மழையின் பங்களிப்புக்கும், பசுக்களுக்கும் நன்றி செலுத்துவது இந்தத் தைப்பொங்கல் விழாவின் பிரதான நோக்கமாகும்.
கடவுள் மற்றும் இயற்கையுடன் எப்பொழுதும் பின்னிப் பிணைந்திருக்கும் எமது சகோதர தமிழ் சமூகத்தினர் இந்தப் பண்டிகையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகின்றனர். நன்றிக்கடன் தெரிவிப்பது தமது வாழ்க்கையுடன் இணைந்த கௌவரமான பொறுப்பு எனக் கருதி அவர்கள் தமது விளைநிலங்களிலிருந்து பெறும் புதிய அறுவடைகளை தாம் நம்பிக்கை வைத்துள்ள சூரிய பகவான் உள்ளிட்ட ஏனைய கடவுள்களுக்கு பூஜை செய்கின்றனர்.
தமிழ் மக்களின் பாரம்பரிய நாட்காட்டிக்கு அமைய ஜனவரி மாதம் தை மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இது மிகவும் அலங்காரமான கலாசார நிகழ்வுகளைக் கொண்ட விழாவாகும். தமது இல்லத்தின் தூய்மையை பிரதான விடயமாகக் கொண்ட தமிழ் பெண்களின் அழகான கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட முற்றம் இந்த பொங்கல் விழாவில் மறக்கமுடியாத, அலங்காரமான அடையாளமாகும்.
2025ஆம் ஆண்டில் மலரும் தைப்பொங்கல் இன வேறுபாடுகள் இன்றி, பொங்கலை முழு நாட்டுக்கும் பகிரக்கூடிய கருணையுள்ளம் ஏற்படும், ஒத்துழைப்பு, சமத்துவம், செழிப்பு மற்றும் நோய்நொடிகளின் ஆபத்துக்களிலிருந்து மீண்ட நாளைய தினத்தின் தொடக்கமாகட்டும்!
The post தைப்பொங்கல் தின செய்தி appeared first on PFP News.