ஒன்பதாவது பாராளுமன்றத்தில் செயற்பட்ட மொத்தக் குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் எண்ணிக்கை 86…
- ஒன்றியங்கள் 12
- சமர்ப்பிக்கப்பட்ட குழு அறிக்கைகள் 382
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலம் 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூடியது முதல் கலைக்கப்பட்ட நாள் வரை 4 ஆண்டுகளும் 1 மாதமும் 4 நாட்களும் ஆகும். இதற்கமைய 5 கூட்டத் தொடர்களைக் கொண்ட இப்பாராளுமன்றம் 390 நாட்கள் கூடியுள்ள ஒன்பதாவது பாராளுமன்ற காலத்தில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய 74 குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் 12 பாராளுமன்ற ஒன்றியங்கள் செயற்பட்டதுடன், அதற்கமைய மொத்தக் குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் எண்ணிக்கை 86 ஆகும்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் எண்ணிக்கை பின்வருமாறு
சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் | அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் | விசேட குழுக்கள் | சட்டவாக்க நிலையியற் குழு | ஒன்றியங்கள் | மொத்தம் |
16 | 17 | 29 | 11 | 01 | 12 | 86 |
சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் | துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் | அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் | விசேட குழுக்கள் | சட்டவாக்க நிலையியற் குழு | மொத்தம் |
131 | 121 | 97 | 08 | 25 | 382 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள்
அதற்கமைய, 16 சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் செயற்பட்டதுடன், 131 அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. 16 சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள் பின்வருமாறு.
- தெரிவுக் குழு
- பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
- நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
- சபைக் குழு
- ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
- அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
- அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு
- அரசாங்க நிதி பற்றிய குழு
- வங்கியியல் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு
- வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு
- பொருளாதார உறுதிப்படுத்தல் குழு
- வழிவகைகள் பற்றிய குழு
- பொது மனுக்கள் பற்றிய குழு
- அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழு
- உயர் பதவிகள் பற்றிய குழு
- இணைப்புக் குழு
- பின்வரிசை உறுப்பினர் குழு
17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் பின்வருமாறு;
- உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- உயர்கல்வி மற்றும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வு பற்றிய உப குழு
- ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- சுகாதார அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி பற்றிய உப குழு
- தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
- வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு
துறைசார் மேற்பார்வைக் குழுக்கலினால் ஒரு புதிய அங்கமாக சட்டமியற்றும் செயற்பாட்டில் இலங்கையின் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தின. இதன் விளைவாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு குழுக் கூட்டங்களில் செயற்பாட்டு ரீதியாக பங்குபற்றுவதற்கான வாய்ப்பு ஒன்பதாவது பாராளுமன்றக் காலப்பகுதியில் வழங்கப்பட்டது. சட்டமியற்றும் செயல்முறைக்கு புதிய கண்ணோட்டத்தையும் புதிய கருத்துக்களைக் கொண்டு வருவதன் மூலம், கொள்கை வகுத்தல் மற்றும் மேற்பார்வையில் இளைய தலைமுறையினரின் குரல் கேட்கப்படுவதையும் பரிசீலிக்கப்படுவதையும் உறுதிசெய்து, பாராளுமன்றச் செயற்பாட்டிலுள்ள நுணுக்கங்களையும் சிக்கல்களையும் புரிந்து கொள்ள உதவுதல் உள்ளிட்ட சிவில் பொறுப்புகள் மற்றும் நிறுவன இடைத் தொடர்புகள் பற்றிய சிறந்த புரிதலைப் பெறுவதற்கு இடமளித்தல் இதன் நோக்கமாகும்.
அத்துடன், நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஒவ்வோர் அமைச்சரவை அமைச்சுக்களுக்கும் ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் இருக்க வேண்டும் என்பதுடன், இதற்கமைய 29 ஆலோசனைக் குழுக்கள் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் செயற்பட்டன.
அதற்கு மேலதிகமாக ஒன்பதாவது பாராளுமன்ற காலப்பகுதியில்;
- இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
- தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நிலை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொ டர்பில் முன்மொழிவுகளையும் வி தப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையின் கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்களின் விபத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
- நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
- மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கை உள்ளிட்ட நீர் மூலங்களின் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து புதிய புனர்நிர்மாண முன்மொழிவுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான விசேட குழு
- இலங்கையில் சட்டக் கல்வியின் மீளாய்வு மற்றும் சீர்திருத்தத்திற்கான விதப்புரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு
ஆகிய 11 விசேட குழுக்கள் செயற்பட்டதுடன், அவற்றின் பணிகள் நிறைவேற்றப்பட்டு 08 குழுக்கள் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த 08 அறிக்கைகளும் பின்வருமாறு;
- இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையில் முன்மொழியப்பட்ட ‘வணிக தொழில்முயற்சிகளுக்கான தயார்நி லை (B-READY) சுட்டென்’ பற்றிய தயார்படுத்தல் தொடர்பி ல் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொ டர்பில் முன்மொழிவுகளையும் வி தப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையின் கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்களின் விபத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
- நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
- தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு
- இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு
அத்துடன், பிரதி சபாநாயகர் தலைமை வகிக்கும் சட்டவாக்க நிலையியற் குழு ஒன்பதாவது பாராளுமன்றத்தில், அதன் செயற்பாடுகள் தொடர்பில் 25 அறிக்கைகளை பாரளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது.
The post ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழுக்கள் appeared first on PFP News.